கண்மாயில் மூழ்கி ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

80பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் யாழினி, 12,. இவர் புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இப்பள்ளியில் இன்று மாலை ஆண்டு விழா நடைபெற உள்ளது.

இதற்காக யாழினி மற்றும் அவரது தோழிகளான சுகன்யா, பானு ஸ்ரீ ஆகியோருடன் மாங்குடியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது யாழினி தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடன் இருந்த இரண்டு மாணவிகளும் யாழினியை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். தொடர்ந்து மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் இரண்டு மாணவிகள் தண்ணீரில் மேல் தெரிந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக சுகன்யா, பானுஸ்ரீ ஆகிய இரண்டு மாணவிகளை காப்பாற்றி உள்ளனர்.

தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் ஆழத்தில் இருந்த யாழினியை மீட்க முயற்சித்தும் தண்ணீரில் மூழ்கி யாழினி பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி ஆண்டு விழாவிற்கு தயாராவதற்க்கு கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த யாழினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி