10 லட்ச ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு

54பார்த்தது
சபரிமலையில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் தத்வமசி ஐயப்பா சேவா அறக்கட்டளை சார்பில் சுமார் 8 டன் எடையுள்ள 10 லட்ச ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.



சபரிமலையில் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு தத்வமசி ஐயப்பா சேவா அறக்கட்டளை மூலம் எரிமேலி அருகே அன்னதானம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது, சுமார் , 9 ஆண்டுகளாக ராமநாதபுரம் நகரில் உள்ள பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள், வியாபார பெருங்குடி மக்களிடமிருந்து பெறப்பட்ட அரிசி, காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை தனி வாகனம் மூலம் அன்னதானத்திற்காக அனுப்பி வைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு 10 வது முறையாக தத்வமசி ஐயப்பா சேவா அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் நகர் மார்க்கெட் பவுண்டு கடை தெருவில் உள்ள கோட்டை மாகாளியம்மன் ஆலயத்தில் பூஜைகள் செய்து சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 8 டன் எடையுள்ள அரிசி வகைகள், காய்கறிகள், பல சரக்கு உள்ளிட்ட அன்னதானத்திற்கான பொருட்களை தத்வமசி ஐயப்பா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மணிகண்டன், சுரேஷ், மாணிக்கவாசகம், துரைச்சாமி மற்றும் தத்வமசி ஐயப்பா சேவா அறக்கட்டளை ஐயப்ப பக்தர்கள் நிர்வாகிகள் தனி வாகனம் மூலம் அன்னதானத்திற்காக எரிமேலிக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி