மீனவர்களையும் படகையும் விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டம்

61பார்த்தது
இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கு மன்னார்க்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகு படகில் இருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து தற்போது விசாரணைக்காக இலங்கை தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் மீனவர்களையும் படகையும் விடுவிக்க கோரி மீனவர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி