பாம்பன் ஊராட்சி அக்காள்மடத்தில் இருந்து பாம்பன், இராமேஸ்வரம் பகுதிக்கு தினமும் ஏராளமான மீனவர்கள், பெண்கள் செல்கின்றனர். அக்காள்மடம் பஸ் ஸ்டாப் அருகில் மக்கள் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக குப்பைகளை அகற்றிட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.