ராமநாதபுரம்: மீனவர்கள் பங்கேற்பு!

1771பார்த்தது
ராமநாதபுரம்: மீனவர்கள் பங்கேற்பு!
ராமநாதபுரம், அக். 09 ஒவ்வொரு ஆண்டும் அக் 5 முதல் 12 வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி ராமேஸ்வரம் மீன் வளம், மீனவர் நலத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா பேரணி தங்கச்சிமடத்தில் இன்று காலை நடந்தது.

விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தலைமை வகித்தார். மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முகம், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவர் அகஸ்டலா முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி பேசினார். மீனவ மகளிர் ஒரு கிமீ. , தூரம் வரைவிழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி