ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் இருந்த மின்விசிறிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டுள்ளன. தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி இல்லாததால் கடுமையான வெப்பத்தால் பக்தர்கள் அவதி அடைகின்றனர். இதனால் மின்விசிறி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் செந்தில்வேல் கோரிக்கை விடுத்துள்ளார்.