மீனவர் குறைதிர்ப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தி கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது, * என்பதை நினைவுபடுத்தி, உடனடியாக நடத்த ஆவன செய்ய கோரிக்கை வைத்தோம்.
மேலும் மீன்பிடி தடைக்கலாம் வரும் ஜூன் 15 அன்று முடிவடைக்கிறது. எனவே தடைகாலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். *மீனவர்களின் இன்றைய தேவைகள் மற்றும் கோரிகைகளை கேடடறிந்து மீனவர்களுக்கு தாங்கள் உதவி செய்ய மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் அவசியம்*. எனவே உடனடியாக நடத்த ஆவன செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
மாவட்ட ஆட்சியர் அவர்களும் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து உடனடியாக மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார்