இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதினால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்கு ரத வீதிகளில் வெயிலில் தாக்கத்தை குறைக்க மேற்கூரை அமைக்க வேண்டுமென இந்து பாரத முன்னணியின் மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.