அப்துல் கலாம் நினைவிடத்தில் துவா ஓதி உறவினர்கள் அஞ்சலி.!

78பார்த்தது
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவுகத்தில் அவரது குடும்பத்தினர் துவா ஓதி மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவரது குடும்பத்தினர் கலாம் தேசிய நினைவுகத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் துவா ஓதி மலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமான இன்று அவரது தேசிய நினைவகத்தில அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இன்று பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவுகத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த வேலூர் இப்ராஹிம், அகில பாரத் சிறுபான்மை பிரிவு தலைவர் சித்திக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி