ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர உள்ளதை ஒட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.