ராமேஸ்வரம் முதல் நாகை வரை உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் குறுகிய கடல் பரப்பை கொண்ட பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கின்றனர். இக்கடல் பகுதியில் இலங்கை மன்னார், நெடுந்தீவு, இரண தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இதனால் இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் இன்று கொழும்பு செல்கின்றனர்.