ராமேஸ்வரம் மீனவ சங்கத்தின் சார்பில் துறைமுகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் வரும் (அக்-3)ம் தேதி வியாழக்கிழமை தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது