இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி இன்று (30. 11. 24) தென்மேற்கு வங்க கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறி கரையை கடக்க உள்ளது. இதனால் தென் தமிழக பகுதியில் அதிக கனமழை, மணிக்கு 45 முதல் 55 கி. மீ வேகத்திலும் இடை இடையே 65 கி. மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மறு உத்தரவு வரும்வரை இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது