ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை அடைப்பு

69பார்த்தது
ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத ஸ்வாமி திருக்கோவிலில் 23.12.2024 திங்கட்கிழமை இன்று அஷ்டமி பூப்பிரதஷணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறந்து காலை 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று காலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். காலை 7:00 மணி முதல் பகல் 12 மணி வரை திருக்கோவிலில் நடை சாத்தப்பட்டிருக்கும். பகல் 12 மணிக்கு மேல் திருக்கோவில் நடைதிறந்து சுவாமி திருக்கோவிலுக்கு திரும்பியதும் உச்சிக்கால பூஜை நடைபெறும். அதனால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் காலை 7:00 மணி முதல் பகல் 12 மணி வரை மூலவரை சுவாமி தரிசனம் செய்ய வருவதை தவிர்க்கவும் என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி