ஜீவராசிக்கு படியளந்த ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று பூப்பிரதஷணத்தை முன்னிட்டு கோவில் நடையானது அதிகாலை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்கம் பூஜை நடைபெற்றது. பின்னர் காலை ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் இருந்து எழுந்தருளி கோவிலின் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து ஜீவராசிகளுக்கு படையளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.