ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணி வாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு தகுதி உடையவர்கள் https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.