இராமநாதபுரம், காட்டுஊரணி, வைகைநகரில் வசித்து வரும் தம்பதி கார்த்திக் ராஜா (27) - ஷர்மிளா (23). 2 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு திருமணம் நிகழ்ந்தது. புதுமணஜோடி, நேற்று மாலை ஊரில் உள்ள ஊரணிக்கு, குளிக்கச் சென்றது. நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால், உறவினர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள், ஊரணி நீரில் மூழ்கி உயிரிழந்த தம்பதியின் உடலை மீட்டனர். புதுமண ஜோடியின் மறைவு, உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.