மழை நீரில் மிதக்கும் ராமநாதபுரம்.!

54பார்த்தது
ராமநாதபுரம் நகராட்சியில் போதிய வடிகால் வசதியின்றி நகர் மற்றும் புறநகர் சாலை, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்றும் இன்றும் காலை வேளையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிப்படாமல் உள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் குளம் போல ஆட்சியர் அலுவலகம், ராமேஸ்வரம் சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்குகிறது. குறிப்பாக பேருந்து நிலைய வளாகத்தில் தேங்கியதால் பயணிகளும், அதே போல, அரசு மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி