ராமநாதபுரம், அக். 9-
ராமநாதபுரம் நகர் தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் தலைவர் தாஜுதீன் தலைமை வகித்தார். தமுமுக மாநில துணை பொதுச்செயலர் சலீமுல்லாஹ் கான் சிறப்பு அழைப்பாளராககலந்து கொண்டார். ராமநாதபுரம் நகர் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் நவம்பர் மாதம் மருத்துவ முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது,
அக்டோபர் 28 ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் நகர் தமுமுக சார்பில் 200 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வாகித்தார்.
மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது முஹிதுல்லா பேசினர். கோவை சிறைவாசிகளை
விடுதலை செய்யக் கோரி அக். 28 ல் சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.