கனவு விருது ஆசிரியர்-ஐவருக்கு ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டு!

1073பார்த்தது
கனவு விருது ஆசிரியர்-ஐவருக்கு ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டு!
நாமக்கல் மாவட்டம், விவேகானந்தர் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2023 டிச. 19 ல் நடந்த நிகழ்வில் , பாடப்பொருள் சார்அறிவு, வகுப்பறையில் புதுமையான அணுகுமுறைகள், நவீன தகவல் தொழில் தொடர்பு, தொழில்நுட்பத்தை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை பாராட்டி தமிழகத்தைச் சார்ந்த 379 ஆசிரியர்களுக்குகனவு ஆசிரியர் விருது 2023" என்ற விருதை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வில்சி கிரேஸ் , ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தீமாசின் பர்வீன், கலைமேல்குடியிருப்பு தொடக்கப்பள்ளி ஜெனிபர், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆனந்தி, கீழச்செல்வனூர் நடுநிலைப்பள்ளி பிராங்க்ளின் ரிச்சர்டு ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கனவு ஆசிரியர் விருது வழங்கினார். பதக்கம் பாராட்டுச் சான்று பெற்ற ஆசிரியர்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வாழ்த்து பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி