ரயில் பாலம் நடுப்பகுதி வண்ண வானவேடிக்கையுடன் இணைப்பு!

61பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலத்தின் உறுதித் தன்மை குறைந்ததால் புதிய ரயில் பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாம்பன் புதிய ரயில் பால பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது இந்நிலையில் நேற்று இரவு புதிய பாலத்தின் தூக்குப்பகுதி வண்ண வானவேடிக்கையுடன் இணைக்கப்பட்டது.

வரும் அக்டோபர் 1ந்தேதி முதல் ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

புதிய ரயில் பாலத்தில் பத்து கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும் எனவும், வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி