தங்கச்சிமடம் வோ்க்காடு தூய சந்தியாகப்பா் ஆலய மத நல்லிணக்கத் திருவிழாவையொட்டி, இரவு சப்பர பவனி நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 16 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய அந்தோணியாா், பரலோக மாதா சொரூபம் வைக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.