இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் துறை அலுவலர்களுக்கு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.