ஆட்சியர் அலுவலகத்தை முற்று இட்டு போராட்டம்

85பார்த்தது
200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்



ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தங்கச்சிமடம் பாம்பன் ஊராட்சிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள்

மீன்பிடியை பிரதானமாக செய்து வரும் இவர்கள் மீன்பிடி தடைகால நேரம் மற்றும் மற்ற நேரங்களில் மீனவப் பெண்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள்


இந்நிலையில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளை ராமேஸ்வரம் நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது

ராமேஸ்வரம் நகராட்சியுடன் இரண்டு ஊராட்சிகளை இணைத்தால் மீனவ பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு வரிச் சுமைகளுக்கு ஆளாவார்கள் என குற்றம் குற்றச்சாட்டு கூறி இன்று 200 க்கும் மேற்பட்டோர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மீனவர்களின் நலன் காற்பதாக கூறும் திராவிட மாநில அரசு நகராட்சியுடன் இணைத்து வரிச் சுமையை தலையில் சுமத்துவதோடு மீனவருடைய வேலை வாய்ப்பினை பறிப்பதாக குற்றம் சாட்டினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி