இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம் பாஜக நகர் தலைவர் மாரி, நகர் துணை தலைவர் அரசம்மாள் மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.