ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்


ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் வருவது வழக்கமாக உள்ளது


இந்த நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆட்டோகளில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமர் பாதம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்

இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றி பார்த்த பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிய பணத்தை கொடுக்காமல் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஹைதராபாத் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது


இதனை அடுத்து ஹைதராபாத் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடுத்த புகார் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் இரண்டு பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளது

அதேபோன்று ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகி மீதும் காவல்துறையினர் தகாத வார்த்தையால் பேசி ஒருதலைப் பட்சமாக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி