ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: - அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த அவல நிலையை கண்டு கொள்ளாத திமுக அரசை கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பெரும்பாலோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது ராமநாதபுரம் அரசு பேருந்து பணிமனை முன்பாக மாவட்ட செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையிலும், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் மருது பாண்டியன் மற்றும் அசோக் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்வர்ராஜா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அடைத்து வைக்கப்பட்டனர்.