மீனவர்களின் படகுகளை பிரதமர் நரேந்திரமோடி மீட்டுக் கொடுப்பார்

52பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெறும் ராணி அஹில்யா பாயின் 300 ஆவது பிறந்தநாள் விழா ராமேஸ்வரம் கோ சுவாமி மடத்தில் இன்று நடைபெறுகிறது இந்த விழா தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளதால் அதற்காக இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார் முதலில் அவர் அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார் அவருக்கு ராமேஸ்வரம் பாஜக நகர் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை ஏற்றுக்கொண்டு அதன் பின்பு கோவிலுக்குள்ளே மூன்றாம் பிரகாரம் வழியாக நடந்து சென்று ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தார்

பின்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளை இலங்கை கடற்படை கடலில் மூழ்கடிக்க போவதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்பு தூக்கு தண்டனைக்கு சென்ற மீனவர்களை கூட மீட்டுக் கொண்டு வந்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் பிரதமர் நரேந்திர மோடி படகுகளை மீட்டுக் கொடுப்பார் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி