இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ஜாம்பவேஸ்வரர் திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவு நடந்த பிரதோஷ விழாவில், ஜாம்பவேஸ்வரருக்குச் சிறப்பு அலங்காரமும், இராமர் பாத பூஜையும் நடைபெற்றன. தீபாராதனையுடன் நிறைவடைந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவனை தரிசித்தனர்.