ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்த விசாரணையை ராமேஸ்வரம் போலீசார் தீவிரப்படுத்தி வரும் நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் வெளி நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.