ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ப்ளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் சுமார் 50 மூட்டைகளை இன்று காலை கரை ஒதுங்கி உள்ளது. இதனை கண்ட மீனவர்கள் மரைன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த மரைன் காவல்துறையினர் அவற்றை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்