அதிரடி சோதனை நடத்திட திட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்
இராமநாதபுரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பதிவு செய்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வீடியோக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தடயவியல் சோதனைக்கு அனுப்ப இருக்கிறோம். இராமேஸ்வரத்தில் 120க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், ஹோட்டல்கள், சத்திரங்களை சோதனை செய்ய இருக்கிறோம் ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.