அம்பேத்காரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணியுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு: -
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்ட மாமேதை அம்பேத்காரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கணித்தும், பதவி விலகக் கோரியும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையிலும் மாநில மீனவர்அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும் ராமநாதபுரம் பாரதிநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன முழக்கத்துடன் நடைபேரணியுடன் அம்பேத்காரின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகளை எந்தியவாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்களிடம் இன்று கோரிக்கை மனுவினை அளித்தனர். இந்தப் பேரணையின் போது கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒன்றிய, நகர, வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.