புதிய பள்ளி கட்டிடம் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

80பார்த்தது
புதியதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய நல்ல தரம் வாய்ந்த கட்டிடம் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு: -

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் 03. 11. 2021 ஆம் ஆண்டு தமிழக அரசின் மூலம் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியினை தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த தபோது மாணவர்கள் பள்ளி அறைக்குள் இருந்தபோது எதிர்பாராத நிலையில் 13. 03. 2025 அன்று மேற்கூரை இடிந்து இரண்டு மாணவர்களின் தலையில் விழுந்து உயிர் தப்பினர், எனவே மாவட்ட நிர்வாகம் அவசர நிலையில் நடவடிக்கை எடுத்து மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு புதிய தரமான கட்டிடம் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சீத் சிங் காலோன் அவர்களிடம் பனையடியேந்தல் கிராமத்தின் சார்பில் மனு அளிக்க வந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி