சுடுகாட்டு இடத்தினை போலிபட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை கோரியும், இடத்தினை மீட்டுதரக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு: -
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிறைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் நகர் கிழக்கு குடியிருப்பு பகுதியில் பத்து தலைமுறையாக பயன்படுத்திய மயான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து இறந்த பிணத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து வரும் இட புரோக்கர் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த முருகசெல்வம் மீது பட்டியலின உரிமைகள் தடுப்புச் சட்ட பிரிவில் கீழ் நடவடிக்கை எடுத்து அருந்ததியர் சுடுகாடு மயானத்தை மீட்டுத்தருமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்களிடம் பொதுமக்கள் புகார் மனுவினை அளித்தனர்.