குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

82பார்த்தது
குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுக்குடி வினோபா நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளோருக்கு 7 பொது குழாய்களில் கடந்த சில வாரங்களாக காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால் டேங்கர் லாரிகளில் குடம் ரூ. 12 விலை கொடுத்து வாங்கி அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 30. 09. 2024 இன்று அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி