மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு

73பார்த்தது
ஜே. சி. பி. இயந்திரத்தால் அகற்றப்பட்ட ரோட்டை சரி செய்யாமல் பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டதை சரி செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கன்மாய் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் நீண்ட நாட்களாக ரோட்டை ஜே. சி. பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி போடப்பட்டதால் பள்ளி குழந்தைகள் செல்ல முடியாமலும், பிரசவம் போன்ற அவசர சிகிச்சைக்கு வாகனங்கள் வருவதற்கு முடியாத சூழ்நிலையில் உள்ளதால் பல நாட்கள் ரோட்டை பள்ளம் தோண்டி பல நாட்கள் கிடப்பில் போடப்பட்ட ரோட்டினால் 100க்கும் மேற்பட்ட எங்களது கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் உடைத்து வேலை பார்த்த ரோட்டை சரி செய்து தரும்படி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி