மண்டபம் பேரூராட்சி சுற்றியுள்ள தெருக்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் தோண்டப்பட்டு பள்ளங்களை மூடிய பிறகு சாலை அமைக்க வேண்டும் என்று மண்டபம் பேரூராட்சி கூட்டத்தில் பேரூர் கவுன்சிலர்கள் புகார்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பேரூராட்சியில் சாதாரண கவுன்சில் கூட்டம் தலைவர் டி.ராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தால் தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடிய பிறகு சாலை அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று அலுவலர்களை அழைத்து சேர்மன் ராஜா உடனடியாக பள்ளங்களை மூடுவதற்கு உத்தரவிட்டார். மேலும் தெருக்களில் தண்ணீர் மற்றும் மின்சாரப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.