ஜூன் 10ல் மக்கள்  குறைதீர் கூட்டம்.!

70பார்த்தது
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மார்ச் 16 முதல் நடைபெறவில்லை.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்துள்ளது. ஜூன் 10ல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில் மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், நேரில் மனுக்களை அளித்து, தங்கள் குறைகளை கலெக்டரிடம் நேரில் தெரிவிக்க முடியாமல், பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்த நிலையில் இனிமேல் வழக்கம்போல் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி