ராமநாதபுரத்தில் நாளை முதல் மக்கள் குறைதீா் முகாம்.!

81பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் முகாம் ஜூன் 10-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மாா்ச் 16-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதன்படி, நாடு முழுவதும் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தோ்தல் நன்னடத்தை விதிகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை, அன்றைய தினம் பதிவு செய்து, தீா்வு காணலாம் என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி