ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுர வாசல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுர வாசல் வழியாக நாள்தோறும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குச் செல்கின்றனா்.
இதேபோல, மேற்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். மேலும், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.
இந்ந நிலையில், அந்தப் பகுதியில் சிலா் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து பாதிப்பும், கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. எனவே, போக்குவரத்து போலீஸாா், இந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.