பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா இன்னும் 2 வாரத்திற்குள் நடக்கும் என்றும், இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில் தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில் ரூ. 550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன
புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் வருகைக்காக திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. பணிகள் முடிவடைந்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் 2 வாரங்களுக்குள் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது