பாம்பனில் 1846ம் ஆண்டு ஐரோப்பியர்களால் 100 அடி உயர நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு பிறகு கலங்கரை விளக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு மீண்டும் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ரூ. 10 கட்டணத்தில் பூங்காவுடன் இயங்கும் நேவல் கலங்கரை விளக்கம் குழந்தைகளுடன் பொழுதினை கழிக்க ஏற்ற இடமாக அமையும்.