பாம்பன் கடலில் ரூ. 530 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி 2020ல் துவங்கியது. இப்பாலம் நடுவில் லிப்ட் முறையில் இயக்கப்படும் தூக்கு பாலம் பொருத்தப்பட்டு பாலம் கட்டுமானப் பணி முடிந்தது. இதனை நவ. 13ல் ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி புதிய பாலத்தில் ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார். குறைகள் சரி செய்த பின்னரும் புதிய ரயில் பாலம் 3 மாதங்களாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.