ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக போட்டியிட வைக்கப்பட்ட பல 'பன்னீர்செல்வங்களால்' எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர்ஓ. பன்னீர்செல்வம், பா. ஜ. , ஆதரவோடு அ. தி. மு. க. , தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஓட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்த, ஐந்து பன்னீர்செல்வங்கள் களம் இறக்கப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி, திருமங்கலம் அருகே வாகைக்குளம், மதுரை சோலை அழகுபுரம், ராமநாதபுரம் அருகே வலாந்தரவை, கங்கை கொண்டான் பகுதிகளை சேர்ந்த ஐந்து பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டனர். இவர்கள் குறைந்த ஓட்டுகளே பெற்றனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 3 லட்சத்து 42, 882 ஓட்டுகளை பெற்றிருந்தார். நவாஸ் கனி, 1 லட்சத்து 66, 782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 2, 981, ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 572, ஒய்யாதேவர் மகன் பன்னீர்செல்வம் 1, 929, ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 1, 376, மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் 2, 402 ஓட்டுகளையும் பெற்றிருந்தனர். இவர்கள் மொத்தமாக 9, 260 ஓட்டுகள் தான் பெற்றனர்.