ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராமர், சீதை, லெட்சுமி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று, கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதிகளிலும் சுற்றி கோவிலுக்கு வந்து சேதுமாதவ சன்னதியில் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.