பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரம்.!

61பார்த்தது
பள்ளிகள் திறப்பு: அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரம்.!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 10ல் திறக்கப்பட உள்ளதால் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் சமையல் கூடம், வகுப்பறைகள், கழிப்பறையை துாய்மை செய்யும் பணி நடக்கிறது.

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஏப். 24 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜூன் 6ல் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்து வெயிலின் தாக்கத்தால் தற்போது ஜூன் 10ல் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக பள்ளிகள், வளாகங்களில் துாய்மைப்பணி வேகமாக நடக்கிறது. ராமநாதபுரம், திருப்புல்லாணி இடங்களில் முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கிய பிரின்ஸ் ராஜ் துாய்மை பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வகுப்பறை, சத்துணவு தயாரிக்கும் சமையல் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை ஆகிய இடங்களில் துாய்மைப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி