பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் டீசல் விற்பனை நிலையம் திறப்பு.!

1333பார்த்தது
பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் டீசல் விற்பனை நிலையம் திறப்பு.!
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் மீனவர்களுக்கான ரூ. 1. 50 கோடி மதிப்பிலான மானிய டீசல் விற்பனை நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி, தமிழ்நாடு என்ற சொன்னதும் அஞ்சும் ஒருவர் இருக்கிறார் என்றால் பிரதமர் மோடி தான். தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவில்லை. என்றார். இந்தியன் ஆயில் கழக தலைமை மேலாளர் மாரீஸ்வரி, மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி (ராமநாதபுரம்), உதவி இயக்குநர்கள் அப்துல்காதர் ஜெய்லானி ( ராமேஸ்வரம்), சிவக்குமார் (மண்டபம்), கோபிநாத் (ராமநாதபுரம்) மீன்வளர்ச்சி கழக மேலாளர் தமிழ் மாறன், முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், உதவி மேலாளர் செல்வலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலா உள்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி