இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடல் தொழில் அமைச்சர். சந்திரசேகரன் அமைச்சர் இன்றையதினம் தெரிவித்தார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு விஜயத்தினை மேற்கொண்டபோது இலங்கை - இந்திய மீனவர்களிடையே ஒரு மனிதாபிமானமான தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
அந்த தீர்மானத்துக்கான கலந்துரையாடல் எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கப்படும்? " என கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அவர்
பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது.
மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை.
இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் - என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் 150 கோடி மதிப்புள்ளான 558 தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை சொந்தமாகி உள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது.