ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா வருகிற அக். 2-இல் தொடங்க உள்ளது
ராமநாதசுவாமி கோயில் நவராத்திரி விழா வருகிற அக். 2-இல் தொடங்குகிறது. அன்றைய தினம் மகாளய அமாவாசை நாளான அன்று இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரத வீதி உலா நடைபெறுகிறது. தொடா்ந்து, காப்புக் கட்டுதலுடன் நவராத்திரி உற்சவம் தொடக்குகிறது.
நவராத்திரி விழாவின் முதல் நாள் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் அன்னபூரணி கோலத்தில் கொலுவில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
தொடந்து, அக். 4-ஆம் தேதி அம்மன் மகாலட்சுமி அலங்காரத்திலும், அக். 5-ஆம் தேதி சிவதுா்க்கை அலங்காரத்திலும், அக். 6-இல் சரஸ்வதி அலங்காரத்திலும், அக். 7-இல் கெளரி சிவபூஜையும், அக் 8-இல் சாரதாம்பிகை, அக். 9-இல் கஜலட்சுமி, அக். 10-இல் மஹிஷாசூரமா்த்தினி, அக். 11-இல் துா்கா, லட்சுமி, சரஸ்வதி என மூன்று தேவியா்கள் திருக்கோலத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்
விழா நாள்களில் தினமும் மாலை 6. 30 மணியளவில் பரத நாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது